Skip to main content
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - S$64,000 வழங்கும் சிங்கப்பூர் அரசாங்கம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்குச் சிங்கப்பூர் அரசாங்கம் 64,000 வெள்ளி வழங்குகிறது.

அந்தத் தொகை சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதித்திரட்டு முயற்சியைச் சென்றடையும்.

ஆப்கானிஸ்தானுக்கு 50,000 வெள்ளி நிதியளிக்க சங்கம் உறுதியளித்துள்ளது.

பாதிக்கப்பட்டோருக்கு உணவு, மருந்து, குடிநீர் முதலிய முக்கியப் பொருள்களை அனுப்புவது முதன்மையானது என்று சங்கம் சொன்னது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (31 ஆகஸ்ட்) ஆப்கானிஸ்தானின் கிழக்கு வட்டாரத்தை 6.0 ரிக்டர் நிலநடுக்கம் உலுக்கியது

இன்றைய நிலவரப்படி 1,469 பேர் மாண்டனர்; 3,700க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

சிங்கப்பூரர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை என்று வெளியுறவு அமைச்சு சொன்னது.

சிங்கப்பூரர்கள் ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டது.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்