"அவசரகால இருப்பிலிருந்து எரிசக்தியைப் பயன்படுத்தும் தேவை தற்போது இல்லை"
படம்: CNA
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் அவசரகால இருப்பிலிருந்து எரிசக்தியைப் பயன்படுத்தும் தேவை தற்போது இல்லை என்று எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பத் துறைகளுக்குப் பொறுப்புவகிக்கும் அமைச்சர் டான் சீ லெங் கூறியிருக்கிறார்.
எனினும் நாடு பலதரப்பட்ட நெருக்கடி காலத்திற்குத் தயாராய் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் திரவ இயற்கை எரிவாயு நிலையத்திற்குச் சென்ற அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்தச் சிக்கலான காலத்தில் சிங்கப்பூரர்களும் வர்த்தகங்களும் முடிந்தவரை எரிசக்தியை மிச்சப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
ஈரானின் எண்ணெய் வளம் நிறைந்த கார்க் தீவிலும் கத்தாரின் Ras Laffan எரிவாயு நிலையத்திலும் அண்மையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
அவை அனைத்துலக எண்ணெய், எரிவாயு விநியோகத் தொடரில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அமைச்சர் டான் சொன்னார்.