Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ASEAN கிண்ணக் காற்பந்துப் போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -
ASEAN கிண்ணக் காற்பந்துப் போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய சிங்கப்பூர்

(படம்: CNA/Matthew Mohan)

ASEAN கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிக்குச் சிங்கப்பூர் தகுதி பெற்றுள்ளது.

நேற்றிரவு கோலாலம்பூரின் புக்கிட் ஜலில் (Bukit Jalil) அரங்கில் மலேசியாவுடன் பொருதியது சிங்கப்பூர்.

விறுவிறுப்பான அந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் புகுத்தவில்லை.

சமநிலையில் முடிந்தது போட்டி.

அதன் மூலம் A பிரிவில் சிங்கப்பூர் இரண்டாம் நிலையில் உள்ளது. முதலிடத்தில் உள்ளது தாய்லந்து.

2021ஆம் ஆண்டு ASEAN கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது. அப்போது இந்தோனேசியாவிடம் அது வெற்றியை நழுவ விட்டது.

இம்முறை அஞ்சாமல் துடிப்பாக விளையாடும்படி வீரர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளதாக அணியின் பயிற்றுவிப்பாளர் கூறினார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்