Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

சிங்கப்பூர் வீடுகளில் ரகசிய மேல்தளங்கள்... அறைகள்... கட்டலாமா முடியாதா?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் அண்மையில் வீடொன்றில் சட்டவிரோதமாக மேல்தளத்தைக் கட்டிய ஆடவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

"இப்படியும் சட்டம் இருக்கிறதா" என்று சிலர் வியந்துபோயினர். கழக வீடுகள் மட்டுமல்லாமல் தனியார் வீடுகளிலும் கட்டடங்களிலும் சில அம்சங்களைச் சேர்ப்பது, அகற்றுவது போன்றவற்றுக்கு அனுமதி நாடவேண்டும்.

பாதுகாப்பைக் கருதி அரசாங்கம் சில சட்டங்களை வரையறுத்துள்ளது.

அதுகுறித்து 'செய்தி' வீட்டு முகவர் ராமா சுப்பிரமணியனிடம் பேசியது.

🏠 வீட்டை எந்த விதத்தில் மாற்றக்கூடாது?

வீட்டில் இருக்கும் எந்த அங்கத்தையும் பெரியதாக்கும் பணிகள் சட்டவிரோதமானவை.

வீட்டின் அங்கங்களைப் பெரியதாக்குவதால் அதன் விலைமதிப்பு கூடலாம் - அவ்வாறு செய்வதை சிங்கப்பூர்ச் சட்டம் அனுமதிக்காது.

உதாரணம்...
  • வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள்:
வீட்டு வாசலின் வெளியே உள்ள இடத்தை விலைகொடுத்து வாங்காமல் அந்த இடத்தை மூடி மறைத்து வீட்டுடன் சேர்த்துக்கொள்வது தவறு.
  • தனியார் வீடுகள்:
உயரத்தில் இருக்கும் கூரையின்கீழ் புதிய தளத்தை உருவாக்கி அதை வேறோர் அறையாகப் பயன்படுத்தக்கூடாது.
வீட்டு வளாகத்தைச் சுற்றியுள்ள இடத்தில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்கக்கூடாது.
(படம்: CNA/Jeremy Long)
🏠 மாற்றம் வேண்டுமா? யாரைக் கேட்கலாம்?
  • வீடமைப்பு வளர்ச்சிக்கழக வீடுகள்:
நகர மன்றம் அல்லது வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடமிருந்து அனுமதி நாடலாம் - ஆனால் அதற்கான நிர்வாக நடைமுறைக்குக் கூடுதல் நேரமெடுக்கும்.
  • கூட்டுரிமை வீடுகள்:
வீட்டு நிர்வாகக் குழுவிடமிருந்து அனுமதி பெறவேண்டும் - அதற்குக் கூடுதல் நேரம் பிடிக்கலாம்.
(படம்: Mediacorp)
🏠 மாற்றம் செய்யப்பட்ட வீட்டை மறுவிற்பனை செய்ய இயலுமா?

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்ட வீடுகளை அதிகாரிகள் விற்க அனுமதிக்கமாட்டார்கள்.

வீட்டை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றியமைக்கவேண்டும். அதன் பின்னரே வீட்டை விற்கலாம்.
 
🏠 வீட்டில் பெரிய அளவிலான மாற்றத்தைச் சட்டபூர்வமாகக் கொண்டுவர விரும்புவோருக்கான ஆலோசனை?

இரண்டு அறைகளை ஓர் அறையாக்குவதற்கு வீடமைப்பு வளர்ச்சிக்கழகம் அனுமதியளிக்கிறது.

ஆனால் அப்படிச் செய்தால் வீட்டின் விலைமதிப்பு குறைந்துவிடும். அதிகமான அறைகள் உள்ள வீடுகளுக்குக் கூடுதல் விலைமதிப்புண்டு.

எனவே வீட்டை நிரந்தரமாக மாற்றுவதற்குப் பதிலாக, பழையபடி திரும்ப மாற்றக்கூடிய தற்காலிக அம்சங்களைச் சேர்ப்பது நல்லது என்று திரு ராமா பரிந்துரைக்கிறார்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்