சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் சிங்கப்பூரிடம் பயிற்சி பெற விரும்புகிறது: கௌரவக் குடிமகன் விருதுபெற்ற திரு தருண் தாஸ்

சிங்கப்பூர் இந்திய வர்த்தக உறவுக்குப் பாலம் அமைத்த திரு தருண் தாஸுக்கு சிங்கப்பூர் கௌரவக் குடிமகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குச் சென்றிருக்கும் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் புதுடில்லியில் திரு தருண் தாஸுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தார்.
இந்தியத் தொழில்துறைச் சம்மேளனத்தின் முன்னாள் தலைமை இயக்குநராகப் பணியாற்றியவர் திரு தருண் தாஸ்.

85 வயது திரு தாஸ் சிங்கப்பூர் இந்தியா இடையிலான உத்திகளை வகுக்கும் கலந்துரையாடல்களை பல்லாண்டுகள் வழிநடத்தியவர்.
சிங்கப்பூர் இந்தியா இடையே இன்று நாம் காணும் சிறந்த பொருளாதார உறவுக்கும் மக்கள் தொடர்புகளுக்கும் திரு தாஸின் அயரா முயற்சிகள் முக்கியக் காரணம்.

சிங்கப்பூர் தம்மை விருதுக்குத் தேர்ந்தெடுத்தது மிகப்பெரிய கௌரவம் என்றார் திரு தாஸ்.
சிங்கப்பூரின் பயிற்சியைப் பெற இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் விரும்புகிறது என்றார் அவர்.
தொழில்நுட்பத்தில் சிங்கப்பூர் மிகச் சிறந்து விளங்குவதாய்ச் சொன்ன திரு தாஸ், இந்தியா புதிய தொழில்நுட்பங்களை சிங்கப்பூரிலிருந்து பெற எப்போதும் விரும்புவதாய்க் குறிப்பிட்டார்.
இந்தியாவுடனான வர்த்தக, பொருளாதார உறவுகளைப் பலவகையில் முன்னெடுத்துச் செல்லமுடியும் என்று உறுதியாக நம்புவதாகச் அவர் சொன்னார்.
சிங்கப்பூர் இந்திய உறவு தொடர்ந்து வளர்ச்சி கண்டுவருகிறது. ஒவ்வொரு ஆங்கில எழுத்திலும் இருநாடுகளும் கூட்டணி வைத்துக்கொள்ள முடியும் என்றார் திரு தாஸ்.