Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் 35ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகளை 2029ஆம் ஆண்டு ஏற்றுநடத்தவுள்ளது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர், 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 2029ஆம் ஆண்டு மீண்டும் தென்கிழக்காசிய விளையாட்டுகளை ஏற்றுநடத்தவுள்ளது.

இன்று வியட்நாம் தலைநகர் ஹனோயில் (Hanoi) நடந்த சந்திப்பில், விளையாட்டுகளை ஏற்றுநடத்துவதற்கான சிங்கப்பூரின் விருப்பத்தைத் தென்கிழக்காசிய விளையாட்டுகள் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது.

சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றமும் SportSG அமைப்பும் அதனைத் தெரிவித்தன.

"மதிப்புமிகு வட்டார விளையாட்டு நிகழ்வை மீண்டும் சிங்கப்பூரில் நடத்துவதில் மகிழ்ச்சி",

என்று தேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் டான் சுவான் ஜின் கூறினார்.

சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள், உள்ளூர் மக்களின் ஆதரவுடன் இந்த வட்டாரத்தின் சிறந்த விளையாட்டு வீரர்களுடன் போட்டியிட அது வாய்ப்பளிக்கும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் தோங் தெரிவித்தார்.

சிங்கப்பூர் 2015ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளை ஏற்றுநடத்தியது.

தென்கிழக்காசிய விளையாட்டுகள் அடுத்து கம்போடியாவில் நடைபெறவுள்ளன.

அதன் பின்னர் தாய்லந்தும் 2027இல் மலேசியாவும் போட்டிகளை ஏற்றுநடத்தவிருக்கின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்