Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

வேற்றுமையில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் இசை - கர்நாடக இசை பாணியில் பாடிய சீனக் கலைஞர்..சீனப் பாடலைப் பாடிய இந்தியக் கலைஞர்

வாசிப்புநேரம் -
சீனப் பாடலில் கர்நாடக இசையின் அழகு…தெலுங்குப் பாடலைப் பாடும் சீனக் கலைஞர்…

கர்நாடக இசையில் சீனப் பாடலின் எதிரொலி…
சீனப் பாடலைப் பாடும் இந்தியக் கலைஞர்…

"இசையில் வித்தியாசமான கண்ணோட்டங்களைச் சேர்த்தால் அது மாறுபட்ட சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் கூட இணைக்கும்,"

என்று கர்நாடக இசை பாணியில் பாடிய சீனக் கலைஞர் ஃபூ யுவெ நிங் (Foo Yue Ning) செய்தி-இடம் கூறினார்.

அவர் இந்தியப் பல்லிய இசைக்குழுவின் புதிய இளையர் பிரிவு நேற்று முன் தினம் (பிப்ரவரி 5) படைத்த ‘கானப் பிரகாசம் - A vibrant new Dawn’ எனும் இசைநிகழ்ச்சியில் பாடினார்.

நிகழ்ச்சியில் 10 இசைப் படைப்புகள் இருந்தன.

ஃபூவின் பாடலுக்குக் காலஞ்சென்ற கலைஞர் L வைத்யநாதன் உருவாக்கிய Crossroads எனும் பல்லிய இசை பின்னணியாக இருந்தது.

‘ரார வேணு கோபா பாலா’ எனும் கர்நாடக ஸ்வரஜதி, பிரபலமான சீனப் புத்தாண்டுப் பாடல் ‘Xi Yang Yang’ ஆகியவற்றின் அழகிய கலப்பில் இசை அமைக்கப்பட்டிருந்தது.

ஃபூவும் இந்தியக் கலைஞர் அம்ரிதாவும் தெலுங்கு வரிகளும் சீன வரிகளும் கலந்த ஒரு பாடலைப் பாடினர்.

கடந்த மாத நடுப்பகுதியிலிருந்து வாரந்தோறும் இரு முறையாவது ஒத்திகை பார்த்ததாக இருவரும் கூறினர்.

ஆனாலும் தனித்தனியாக இருவருக்கும் பல சவால்கள்...

ஃபூவுக்கு கர்நாடக இசையில் சேர்க்கப்படும் நுணுக்கங்களைப் பாடியது புதிய அனுபவமாக இருந்தது.

“சீனப் பாப் பாடல்களில் நுணுக்கங்களைச் சேர்க்கத் தேவையில்லை. தெலுங்கு வரிகளை உச்சரிப்பதற்கு நாக்கை மேலும் சுழற்றவேண்டியிருந்தது.” என்று ஃபூ வேடிக்கையாகச் சொன்னார்.

சீன மொழியை இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொண்ட அம்ரிதாவுக்குச் சீனத்தில் பாடியது சிரமமாக இல்லை. ஆனால் சுருதி சேர்ப்பதில் சவால் இருந்தது.

“சுருதியை உச்சக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வது சிரமமாக இருந்தது. அதுவும் அதை பல்லிய இசைக்குழுவுக்கு ஈடாகப் பாட வேண்டியிருந்தது,” என்றார்,

“Crossroads-இல் பயன்படுத்தப்பட்ட சீன இசையிலும் கர்நாடக இசையிலும் சில ராகங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இசை பாணிகள் வேறுபட்டாலும், கலாசாரங்கள் வேறுபட்டாலும் அவை ஒன்றிணைவதில் தடை ஏதுமில்லை, ” என்றார் இசைக்குழுவின் நடத்துநராகவும் பயிற்றுவிப்பாளராகவும் இருந்த விக்னேஸ்வரி வடிவழகன்.

இசை, வேற்றுமையில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் என்பதை இது உணர்த்தியதாக அவர் பெருமிதம் பொங்கச் சொன்னார்.
Singapore Indian Youth Orchestra
Singapore Indian Youth Orchestra
Singapore Indian Youth Orchestra
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்