Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்- இந்தோனேசியக் கூட்டுத் தொழிலியல் பூங்கா விரிவுபடுத்தப்படும்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரும் இந்தோனேசியாவும் இணைந்து நடத்தும் கூட்டுத் தொழிலியல் பூங்கா விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong)  அறிவித்துள்ளார்.

இந்தோனேசியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்ட அவர் பூங்காவின் அதிகாரிகளைச் சந்தித்தபோது அவ்வாறு கூறினார்.

Kendal Industrial Park எனும் அந்தத் தொழிலியல் பூங்காவின் அளவு இரட்டிப்பாக்கப்படும் என்று கூறப்பட்டது.

அதன்மூலம் தொழிலியல் பூங்காவுக்கும் இந்தோனேசியாவின் மத்திய ஜாவா பகுதிக்கும் கூடுதல் முதலீடுகள் கிடைக்கும் என்று திரு. வாங் சொன்னார்.

2016-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட Kendal Industrial Park, சிங்கப்பூரின் Sembcorp நிறுவனத்துக்கும் Jababeka எனும் இந்தோனேசிய நிறுவனத்துக்கும் இடையிலான கூட்டுத் திட்டம்.

அது 1.7 பில்லியன் டாலர் மதிப்புமிக்க அமெரிக்க முதலீடுகளை ஈர்த்துள்ளது.

தொழிலியல் பூங்கா முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு அது 2,200 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும்.

உள்ளூர்வாசிகளுக்கு 12,000க்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்