Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர், இந்தோனேசியா

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரும் இந்தோனேசியாவும் பருவநிலை மாற்றம், நீடித்த நிலைத்தன்மை முயற்சிகள் ஆகியவற்றை மேம்படுத்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கரிம விலைகள், பசுமை நிதி, இயற்கை அடிப்படையிலான தீர்வுகள், பல்லுயிர்ச் சூழல் அடிப்படையிலான அணுகுமுறை, தூய்மைத் தொழில்நுட்பத் தீர்வுகள் ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படும்.

அந்த அம்சங்களில் ஒத்துழைக்க, சிங்கப்பூருக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே முன்னோடித் திட்டங்கள், ஆய்வு ஒத்துழைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகள் ஆகியவை உள்ளடக்கிய வேலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

பசுமை தொடர்பான விவகாரங்களைக் கலந்துபேச உயர்நிலையில் அமைச்சர் சந்திப்புகள் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும்.

ஜனவரியில் சிங்கப்பூர், இந்தோனேசியத் தலைவர்கள் சந்தித்ததைத் தொடர்ந்து அந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது.

அப்போது பசுமை வளர்ச்சி உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேசியிருந்தனர்.

எதிர்வரும் Blended நிதிக் கூட்டணியில் கலந்துகொள்ள இந்தோனேசியா சிங்கப்பூருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அந்த நிகழ்ச்சியில் நிதித்திரட்டு, பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்கள் ஆகியவை குறித்துப் பேசப்படும்.

பாலித் தீவில் நடைபெறவிருக்கும் G20 தொழில்வள நாட்டுத் தலைவர்களின் உச்சநிலைச் சந்திப்பில் அந்தக் கூட்டணி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்