Skip to main content
சிங்கப்பூருக்குத் திரும்பிய விமானத்தில் திருட்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்குத் திரும்பிய விமானத்தில் திருட்டு - இருவர் குற்றஞ்சாட்டப்பட்டனர்

வாசிப்புநேரம் -
கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பிய விமானத்தில் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்கள் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

அவர்கள் சாங்கி விமான நிலையத்தின் ஒன்றாம் முனையத்தில் உள்ள பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

35 வயது லியூ சிதியாங்கும் (Liu Xitang) 40 வயது வாங் வியூம் (Wang Wie) சீனாவைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் பெண் பயணி ஒருவரிடமிருந்து 169 வெள்ளியையும் இரு கடன்பற்று அட்டைகளையும் திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இருவரும் விமானத்தில் திருடிய சந்தேகத்தின்பேரில் சென்ற திங்கட்கிழமை (2 ஜூன்) இரவு சுமார் 8.50 மணிக்குக் கைதுசெய்யப்பட்டனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூவாண்டு வரையிலான சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்