Skip to main content
உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த $40 மில்லியன் முதலீடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த $40 மில்லியன் முதலீடு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் அதன் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும் 40 மில்லியன் வெள்ளிக்குமேல் முதலீடு செய்கிறது.

உள்ளூரில் தயாரிக்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்தும் ஆய்வுகளுக்கு அந்த நிதி பயன்படுத்தப்படும்.

பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் பயிர்கள்..

நோய் எதிர்ப்புத் திறனுள்ள Sea Bass மீன் இனங்களைப் பெருக்கும் முயற்சி ஆகியவை ஆய்வுகளில் அடங்கும்.

குறைந்த வளங்களுடன் இன்னும் அதிகமான உணவைத் தயாரிக்க அந்த முயற்சிகள் கைகொடுக்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது (Zaqy Mohamad) கூறினார்.

சிங்கப்பூரின் உணவுத்துறை போட்டித்தன்மையுடன் செயல்பட அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நவீன தீர்வுகளைக் கண்டறியவேண்டும் என்றார் அவர்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்