அமைதிக் குழுவில் சேர சிங்கப்பூருக்கு அழைப்பு
This audio is generated by an AI tool.
அமெரிக்கா வழிநடத்தும் காஸா அமைதிக் குழுவில் சேர்வதற்கு சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதைப் பெற்றுள்ளதாக உறுதிசெய்த வெளியுறவு அமைச்சு, தற்போது அழைப்பைப் பரிசீலிப்பதாகக் குறிப்பிட்டது.
மற்ற நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் சுவிட்சர்லந்தில் நடைபெறும் உலகப் பொருளாதாரக் கருத்தரங்கில் அமைதிக் குழு உறுப்பினர்களின் முழுப்பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுவரை ஹங்கேரி, வியட்நாம், மொரோக்கோ ஆகியவை அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளன.
குழுவில் நிரந்தர உறுப்பியம் பெற நாடுகள் 1 பில்லியன் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று திரு டிரம்ப் கூறுகிறார்.