2024இல் 3,000 தலைசிறந்த திறனாளர்களுக்கு ONE Pass வேலை அனுமதி

(படம்: Jeremy Long)
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு சுமார் 3,000 தலைசிறந்த திறனாளர்களுக்கு ONE Pass வேலை அனுமதி வழங்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
சிங்கப்பூரில் Overseas Networks & Expertise Pass (ONE Pass) வேலை அனுமதி 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
திட்டத்துக்குக் தகுதிபெறுவோர் குறைந்தது 12 மாதங்களுக்கு 30,000 வெள்ளி மாதச் சம்பளம் பெற்றிருக்கவேண்டும், தொடர்ந்து அதைப் பெறவும் வேண்டும்.
ஏற்கெனவே வேலை அனுமதியில் உள்ளவர்கள் ONE Pass அனுமதிக்கு மாறலாம்.
அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வேலை அனுமதி கிடைக்கும். மற்ற வேலை அனுமதித் திட்டங்களில் பொதுவாக மூன்று ஆண்டுகள் வரை கிடைக்கும்.
கடந்த ஆண்டு ONE Pass வேலை அனுமதி பெற்றவர்களில் ஆறு பேரில் ஒருவர் புதிதாக விண்ணப்பித்தவர்கள்.
பெரும்பாலோர் நிதித்துறை, காப்பீடு, தொடர்பு, தகவல் துறை போன்றவற்றில் பணிபுரிகின்றனர்.
கடந்த ஆண்டு ஒருவரின் ONE Pass வேலை அனுமதி ரத்துச் செய்யப்பட்டது.
அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்தைப் புரிந்ததாகத் திரு டான் சொன்னார்.