Skip to main content
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

வாசிப்புநேரம் -
மின்னுவதெல்லாம் பொன்னல்ல

படம்: Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அனைத்துலக நகைக்கண்காட்சி சிங்கப்பூரில் தொடங்கியுள்ளது.

வரும் 12ஆம் தேதி வரை அது நடைபெறும்.

தங்கம் விலை கிடுகிடுவென உயரும் காலத்தில், முலாம் பூசப்பட்ட நகைகளை தங்கம் என்று கூறி விற்கும் போக்கும் அதிகரித்துள்ளது.

அதனால் நம்பகமான கடைகளிலிருந்து நகைகளை வாங்கும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துப்படுகிறது.

அசல் தங்க நகைகளில் பொதுவாக 916 குறியீடு அச்சிடப்பட்டிருக்கும்.

91.6 விழுக்காட்டுத் தங்கம் நகையில் கலந்திருப்பதை 916 குறிக்கிறது.

வெள்ளி நகையில் தங்கம் பூசப்பட்டு அது தங்கமூலாம் பூசப்பட்ட நகை என்று வகைப்படுத்தப்படும்.

இப்போது செம்பு, துத்தநாகம் முதலிய நகைகளில் தங்கம் பூசப்பட்டு அவை தங்க முலாம் அணிகலன்களின் விலைக்கு நிகராக விற்கப்படுகின்றன.

இணையத்தில் தங்க நகைகளை வாங்கும்போது மோசடிக்கு ஆளாகும் சாத்தியம் அதிகம்; முலாம் பூசப்பட்ட நகைகள் பெரும்பாலும் சீனாவிலிருந்தே தருவிக்கப்படுவதாகக் கடைக்காரர்கள் கூறினர்.

அண்மைக் காலமாக வைரக்கற்களின் மீதும் மக்களின் பார்வை குவிந்திருக்கிறது.

ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கப்படும் வைரங்கள் கட்டுப்படியான விலைகளில் கிடைக்கின்றன.

வைரத்தின் தரத்தைச் சோதிக்க பல வழிகள்.

அவற்றுள் ஒன்று இந்தக் கருவியைக் கொண்டு செய்யப்படும் சோதனை.

நீல ஒளி வைரம் இயற்கையானது என்பதைக் குறிக்கும்.

சிவப்பு ஒளி வைரம் ஆய்வுக்கூடத்தில் தயாரிக்கப்பட்டதைக் குறிக்கும்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்