சீனாவின் 75ஆவது ஆண்டுநிறைவு - வாழ்த்துத் தெரிவித்த சிங்கப்பூர்த் தலைவர்கள்
வாசிப்புநேரம் -
அதிபர் தர்மன் சண்முகரத்னமும் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் சீனாவின் 75ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு அந்நாட்டின் அதிபர் சி சின்பிங்கிற்கு (Xi Jinping) வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
"சீனாவின் வளர்ச்சி பாராட்டுக்குரியது. வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருந்த 800 மில்லியனுக்கும் அதிகமானோர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே இருக்கும் இணைப்பு வலுப்படுவதைக் காண ஆவலுடன் இருக்கிறேன்," என்றார் அதிபர் தர்மன்.
"கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு துறைகளில் சீனாவின் முன்னேற்றத்தைப் பார்த்திருக்கிறேன்," என்று பிரதமர் வோங் சொன்னார்.
சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நல்லுறவு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆதாரம் : CNA