ASEAN கிண்ணக் காற்பந்துப் போட்டி: திமோர் லெஸ்ட்டேவை வென்றது சிங்கப்பூர்
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: FAS)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ASEAN கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூருக்கு 2ஆவது வெற்றி கிடைத்துள்ளது.
திமோர் லெஸ்ட்டேவுக்கு (Timor-Leste) எதிரான ஆட்டத்தை சிங்கப்பூர் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஹனோயிலுள்ள (Hanoi) Hang Day அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் 76ஆவது நிமிடத்தில் சிங்கப்பூர் முதல் கோலை அடித்தது.
பின்னர் 83, 90ஆவது நிமிடங்களில் சிங்கப்பூர் மேலும் 2 கோல்களைப் புகுத்தியது.
இந்த ஆட்ட முடிவை அடுத்து A குழுவில் சிங்கப்பூர் 6 புள்ளிகளுடன் முன்னணிக்குச் சென்றது.
மலேசியா 5 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறது.
மூன்றாவது இடத்தில் 4 புள்ளிகளுடன் தாய்லந்து உள்ளது.
போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சிங்கப்பூர் 2-1 என கம்போடியாவை வீழ்த்தியது.
அடுத்து செவ்வாய்க்கிழமை (17 டிசம்பர்) ஆட்டத்தில் சிங்கப்பூர் தாய்லந்துடன் மோதும்.
அதன் பிறகு வெள்ளிக்கிழமை (20 டிசம்பர்) மலேசியாவைச் சந்திக்க கோலாலம்பூருக்குப் புறப்படும்.

ஆதாரம் : CNA