Skip to main content
சிங்கப்பூர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்கள் சந்திப்பு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்கள் சந்திப்பு

Facebook/ Lawrence Wong

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் (Anwar Ibrahim) இருதரப்பும் ஒத்துழைக்கக்கூடிய பல அம்சங்கள் குறித்து சிறப்பாகக் கலந்துரையாடியதாய்ச் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) கூறியுள்ளார்.

பிரதமர் லாரன்ஸ் வோங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று புத்ரா ஜெயா சென்றிருக்கிறார். 

சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்களின் வருடாந்திரச் சந்திப்பின் தொடக்கமாகத் திரு அன்வார் நேற்றிரவு (6 ஜனவரி) திரு வோங்கிற்கு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

திரு அன்வாருடனான கலந்துரையாடல்கள் இருதரப்பு உறவுக்குச் சாதகமான பாதையை அமைக்கும் என்று திரு வோங் நம்பிக்கை தெரிவித்தார்.

இருநாடுகளும் அவற்றின் 60 ஆண்டு இருதரப்பு உறவை இந்த வருடம் கொண்டாடுவதை அவர் சுட்டினார்.
 
மலேசிய, சிங்கப்பூர்க் கொடிகளின் நிறங்களில் Petronas இரட்டைக் கோபுரங்கள் ஒளியூட்டப்பட்டதாகத் திரு வோங் அவரின் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆதாரம் : Others/Social media

மேலும் செய்திகள் கட்டுரைகள்