Skip to main content
பூசல்களுக்குச் சமரசத் தீர்வு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பூசல்களுக்குச் சமரசத் தீர்வு - ஒத்துழைப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் - மலேசியா இணக்கம்

வாசிப்புநேரம் -
பூசல்களுக்குச் சமரசத் தீர்வு - ஒத்துழைப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் - மலேசியா இணக்கம்

(படம்: Facebook / Edwin Tong)

வெளியீடு : 04 Jun 2026 09:50AM புதுப்பிப்பு : 04 Jun 2026 11:46AM
சிங்கப்பூரும் மலேசியாவும் இருநாட்டுக்கும் இடையிலான பூசல்களுக்குச் சமரசத் தீர்வு காண்பது தொடர்பான இரண்டு இணக்கக் குறிப்புகளில் கையெழுத்திட்டிருக்கின்றன.

சட்ட, இரண்டாம் உள்துறை அமைச்சர் எட்வின் தோங்கும் (Edwin Tong) மலேசியப் பிரதமர் அலுவலக அமைச்சர் அஸாலினா ஒஸ்மானும் (Azalina Othman) அதைப் பார்வையிட்டதாகச் சட்ட அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

சிங்கப்பூர் அனைத்துலக நடுவர் நிலையம் உள்ளிட்ட அமைப்புகள் இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டன.

கூட்டாக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது, கருத்துப் பரிமாற்றத்தை வலுப்படுத்துவது ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த இணக்கம் காணப்பட்டது.

அமைச்சர்கள் இருவரும் இருநாட்டு நெடுங்கால நல்லுறவை மறுஉறுதிப்படுத்தினர்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்