வசதி குறைந்த மாணவர்களுக்கு SMU கூடுதல் நிதியாதரவு
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (Singapore Management University) குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கூடுதல் நிதியாதரவு வழங்கவிருக்கிறது.
அடுத்த கல்வியாண்டிலிருந்து அவர்களுக்கு ஆண்டுதோறும் நாலாயிரம் வெள்ளி படித்தொகை கொடுக்கப்படும்.
மேலும், அவர்களது கல்விக் கட்டணம் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
அடுத்த ஆண்டிலிருந்து, குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பட்டதாரிகள், வெளிநாட்டில் அனுபவம் பெறுவதற்கான மானியங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
4 ஆண்டுகளில் அவர்கள் நாலாயிரம் வெள்ளி வரை பெற்றுக்கொள்ளமுடியும்.
வெளிநாட்டுப் பயில்நிலைப் பயிற்சியில் பங்கேற்க அந்தப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
புதிய மேம்பாடுகள் வழி இன்னும் கூடுதலான மாணவர்கள் பயன்பெற முடியும் என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் தெரிவித்தது.
இதுவரை திட்டத்தின் மூலம் 200 மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர்.
நேற்று (ஜனவரி 10) நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் 25ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தில் அந்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

ஆதாரம் : CNA