ஏதோ கருகுவது போன்ற வாடை...ஏன்?
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் பல பகுதிகளில் கருகுவது போன்ற வாடை வருவதற்குச் சுற்றுவட்டாரத்தில் நிலப்பகுதியும் காடுகளும் எரிவது காரணங்களாக இருக்கலாம் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு கூறியுள்ளது.
மேகமூட்டத்தால் எந்த இடங்களில் காடு எரிகிறது என்பதைத் துணைக்கோளப் படங்களில் சரியாகப் பார்க்க முடியவில்லை என்று அது Facebook பக்கத்தில் சொன்னது.
ஜொகூரின் கிழக்கு வட்டாரத்தில் எரியும் பகுதிகள் தென்பட்டதாக முன்னதாகச் சொல்லப்பட்டது.
வரும் வாரத்தில் சிங்கப்பூரிலும் இந்த வட்டார நாடுகளிலும் மழை எதிர்பார்க்கப்படுவதால் நிலைமை மேம்படலாம் என்று சுற்றுப்புற அமைப்பு கூறியது.
இன்று காலை 11 மணி வாக்கில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 24 மணி நேர நிலவரப்படி 42க்கும் 54க்கும் இடைப்பட்டிருந்தது.
கிழக்கு, தெற்கு, மத்திய வட்டாரங்களில் குறிப்பாக, காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு சற்று உயர்வாக இருந்தது.