"சுத்தமான தண்ணீர் தடையின்றிக் கிடைப்பதை சிங்கப்பூர் ஒருபோதும் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது" - துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: TODAY)
சுத்தமான தண்ணீர் தடையின்றிக் கிடைப்பதை சிங்கப்பூர் ஒருபோதும் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகம் தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டின் தண்ணீர் நிலவரம் கடந்த பல ஆண்டுகளில் மேம்பட்டு வந்துள்ளது.
இருப்பினும் வருங்காலச் சிங்கப்பூருக்கான தண்ணீர் விநியோகத்தைப் பாதுகாக்க இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளதாகத் திரு. வோங் சொன்னார்.
உலகத் தண்ணீர் தினத்தையொட்டி மரினா அணைக்கட்டில் நடைபெற்ற கொண்டாட்டங்களின்போது திரு. வோங் பேசினார்.
தண்ணீருக்கான பல்வேறு வளங்கள் இப்போது சிங்கப்பூருக்கு உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
முந்திய தலைமுறைச் சிங்கப்பூரர்களின் அயராத முயற்சியால் மட்டுமே அவை சாத்தியமானதாக அவர் குறிப்பிட்டார்.
தண்ணீருக்கான தணியாத தாகத்துக்கு எடுத்துக்காட்டாக அவர் மரினா அணைக்கட்டைக் குறிப்பிட்டார்.
பல்லாண்டுகள் நீடித்த தீவிரமான திட்டமிடல், கடின உழைப்பால் அது நிறைவேறியது.
தண்ணீரைச் சேமிப்பதில் சிங்கப்பூரர்கள் அனைவருமே பங்காற்ற வேண்டுமெனத் துணைப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.