உலக ஒழுங்குமுறை சீர்குலைந்தால் சிங்கப்பூர் தற்காப்பில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும் : பிரதமர் வோங்
படம்: CNA/Ooi Boon Keong
This audio is generated by an AI tool.
உலக ஒழுங்குமுறை சீர்குலையத் தொடங்கினால் சிங்கப்பூர் தற்காப்புமீது அதிகக் கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.
எரிசக்தி, உணவு உள்ளிட்ட விநியோகத் தொடர்களைக் கட்டிக்காக்க சிங்கப்பூர் முயற்சி எடுத்து வருகிறது என்றார் திரு வோங்.
இருந்தபோதும் தற்காப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிவரலாம் என்று அவர் சொன்னார்.
உலக ஒழுங்குமுறை சீர்குலைய ஆரம்பித்தால் இடைவெளி உருவாகும்.
அது குழப்பத்திற்கு இட்டுச்செல்லும் என்று திரு வோங் சொன்னார்.
மண்டாய் ஹில் முகாமிற்குத் திரு வோங் சென்றிருந்தார்.
ஈரான் போரால் தற்காப்புமீது ஏற்பட்ட தாக்கம் குறித்துத் திரு வோங்கிடம் கேட்கப்பட்டது.
விரும்பியதை அடைய நாடுகள் படைபலைத்தையும் வற்புறுத்தலையும் பயன்படுத்தும் ஓர் உலகம் உருவாகலாம் என்று திரு வோங் சொன்னார்.