Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"சரியான காரணத்துக்காகச் சட்டத்துறைக்கு வருவோர் தவறான காரணத்துக்காக வெளியேறக் கூடாது"

வாசிப்புநேரம் -
"சரியான காரணத்துக்காகச் சட்டத்துறைக்கு வருவோர் தவறான காரணத்துக்காக வெளியேறக் கூடாது"

படம்: Envato

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர், சட்டத் துறையை நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கூடிய ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்று சட்ட அமைச்சர் எட்வின் தோங் (Edwin Tong) கூறியிருக்கிறார்.

அதற்குப் பதிலாக அதை இன்னும் எளிதாக்கிவிடுவது முக்கியமல்ல என்றார் அவர்.

சிங்கப்பூரில் சட்டத் துறை நீடித்து நிலைத்திருக்கும் ஒன்றாக இருப்பது பற்றி அண்மையில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அமைச்சர் பதில் சொன்னார்.

சட்டத் தொழிலில் நெருக்கடிகள் அதிகம் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

என்றபோதும் அதில் உள்ள ஆழமான நோக்கம் முக்கியம் என்றார் அவர்.

சட்டத் துறையில் இன்னொருவருக்கு ஆதரவாக வாதிட முடிவதைத் திரு தோங் குறிப்பிட்டார்.

பல வழக்கறிஞர்கள் அதில் உள்ள அந்த நோக்கத்தைப் புரிந்துகொண்டு தொழிலில் சேர்வதாக அவர் சொன்னார்.

வேலையுடன் வரும் பொறுப்புகளையும் நெருக்குதல்களையும் ஏற்க அவர்கள் தயாராக இருக்கின்றனர் என்றார் அவர்.

சரியான காரணத்துக்காகச் சட்டத்துறைக்கு வருவோர், தவறான காரணத்துக்காக வெளியே போய்விடக் கூடாது என்றார் அமைச்சர்.

அதுதான் முக்கியம், சட்டத்துறையை எளிதாக்குவது முக்கியமல்ல என்றார் அவர்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்