நீரிழிவு நோயைச் சமாளிக்கப் புதிய தேசிய இயக்கம்
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை கூடுவதால் அதைக் கையாளப் புதிய தேசிய இயக்கமொன்று தொடங்கப்பட்டுள்ளது.
அதனால் நிறுவனங்கள் நீரிழிவு நோய் நிபுணர்களையும் வளங்களையும் எளிதில் அணுகமுடியும்.
புதிய வேலையிட நலன் இயக்கம் முக்கியமாக மூன்று அம்சங்களில் கவனம் செலுத்தும்.
- சர்க்கரையைக் குறைத்தல்
- சுறுசுறுப்பாக இருத்தல்
- நீரிழிவு நோயுடன் வாழும் ஊழியர்களுக்கு ஆதரவளித்தல்
ஆகியவை அவை.
இயக்கத்தில் ஏழு நிறுவனங்கள் இணைந்துள்ளன.
ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றவும் வேலையிடத்தில் ஊழியர்களுக்கு ஆதரவளிக்கவும் அவை உறுதிகூறியுள்ளன.
உலக நீரிழிவு தினத்தையொட்டி அறிமுகமான வேலையிடநலன் இயக்கம் அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கும்.
இயக்கத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் வேலையிடத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதில் கவனம் செலுத்தும்.
நீரிழிவு பற்றிய மதிய உணவு நேர உரைகள், சுகாதாரப் பரிசோதனைகள், உடலுறுதி, நலவாழ்வு நடவடிக்கைகள் போன்றவற்றை நடத்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
சிஙகப்பூரில் 2024ஆம் ஆண்டு 700,000 பெரியவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டனர்.
2050ஆம் ஆண்டுக்குள் அது ஒரு மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.