GCE சாதாரண நிலைத் தேர்வு - முந்தைய ஆண்டைவிட அதிக தேர்ச்சி

MDDI/Kenneth Tan
பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்களில் சுமார் 87.7 விழுக்காட்டினர் ஐந்து அல்லது அதற்கும் அதிகமான பாடங்களில் தேர்ச்சி பெற்றனர்.
முந்தைய ஆண்டு பதிவான விகிதத்தை விட அது அதிகம்.
அப்போது 86.8 விழுக்காட்டினர் ஐந்து அல்லது அதற்கும் அதிகமான பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
சென்ற ஆண்டு சுமார் 22,700 மாணவர்கள் தேர்வெழுதினர். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் குறைந்தது ஒரு பாடத்தில் C6 தர மதிப்பெண்ணைப் பெற்றனர்.
சுமார் 97 விழுக்காட்டினர் மூன்று அல்லது அதற்கும் அதிகமான பாடங்களில் C6 பெற்றனர்.
கூட்டு மாணவர் சேர்க்கை முறையின்வழி மாணவர்கள் தாங்கள் பயில விரும்பும் பாடத்திற்கு இப்போதிலிருந்து வரும் புதன்கிழமை (15 ஜனவரி) வரை விண்ணப்பிக்கலாம்.