Skip to main content
சிங்கப்பூர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் - ஒடிஷாவுக்கு இடையே 8 இணக்கக் குறிப்புகள் கையெழுத்து

வாசிப்புநேரம் -
சிங்கப்பூருக்கும் இந்தியாவின் ஒடிஷா மாநிலத்துக்கும் இடையே
இன்று எட்டு இணக்கக் குறிப்புகள் கையெழுத்தாகின.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் அவை பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இன்று காலை ஒடிஷா தலைநகர் புவனேஷ்வர் சென்றடைந்த அதிபர் தர்மனை மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி வரவேற்றார்.

இருவரும் மதிய வேளையில் சந்தித்துப் பேசினர்.

பின்னர் உலகத் திறன்கள் நிலையத்தைத் திரு தர்மன் பார்வையிட்டார்.

நிலையம் சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்விச் சேவைப் பிரிவால் அமைக்கப்பட்டது.

நிலையத்தில் இணக்கக் குறிப்புகள் கையெழுத்தாகின.

திறன் வளர்ச்சி, நிலையான எரிசக்தித் தொழில்நுட்பம், தொழிற்பூங்கா அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வது, நகர வடிவமைப்பு ஆலோசனை இப்படிப் பலதரப்பட்ட அம்சங்களில் இணக்கக் குறிப்புகள் கையெழுத்தாகின.

ஒடிஷா மாநில அரசாங்க அமைப்புகளுக்கும் சிங்கப்பூரின் நிறுவனங்கள், கழகங்கள் ஆகியவற்றுக்கும் இடையில் அவை பரிமாறிக்கொள்ளப்பட்டன.

அவற்றுள் இரு இணக்கக் குறிப்புகள் ஒடிஷா மாநிலத்தின் திறன் மேம்பாடு, தொழில்நுட்பக் கல்விச் சேவைப் பிரிவுக்கும் சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்விச் சேவைகள் பிரிவுக்கும் இடையிலானவை.

இம்மாத இறுதியில் ஒடிஷா தொழில்துறை, உற்பத்தி, திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் தனது விருப்பத்தை வெளிப்படுத்த உத்கர்ஷ் ஒடிஷா எனும் முதலீட்டாளர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அதில் சிங்கப்பூர் முக்கிய கூட்டு நாடாக இணைகிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்