Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆசியாவின் முதன்மை நிதி நிலையம் என்ற நிலையை எட்டிய சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் ஆசியாவின் முதன்மை நிதி நிலையம் என்ற நிலையை எட்டியிருக்கிறது. 

உலகத் தரவரிசைப் பட்டியலில் ஹாங்காங்கைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் அந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

நியூயார்க்கும் லண்டனும் பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றன. 

ஆண்டுக்கு இரண்டு முறை உலகின் 119 நகரங்களைக் கொண்டு உலக நிதி நிலையங்களுக்கான தரநிலைக் குறியீடு கணக்கிடப்படுகிறது. 

அதில் மூன்று இடங்கள் முன்னேறி சிங்கப்பூர் மூன்றாம் நிலையை எட்டியுள்ளது. 

கிருமிப்பரவல் காலத்தில் சீனாவின் கடுமையான கட்டுப்பாட்டுக் கொள்கையை ஹாங்காங் பின்பற்றி வந்தது. 

அதனால் அதன் பொருளியல் வளர்ச்சி குறைந்தது. போட்டி வர்த்தக மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் திறனாளர்கள் பிரச்சினையும் அங்கு அதிகரித்தது. 

சிங்கப்பூர் இந்த ஆண்டுத் தொடக்கத்திலேயே வெற்றிகரமாகக் கிருமிப்பரவலுக்கு முந்தியநிலையை எட்டியது.

கட்டுப்பாடுகள் ஏதுமின்றித் தனது எல்லைகளையும் திறந்துவிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்