தேசியப் பயணத்தின் முக்கியக் கட்டத்தில் நாடாளுமன்றம் கூடுகிறது: அதிபர் தர்மன்
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் 15ஆவது நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியிருக்கிறது.
அதைத் தொடங்கிவைத்துப் பேசிய அதிபர் தர்மன் சண்முகரத்னம் தேசியப் பயணத்தின் முக்கியக் கட்டத்தில் நாடாளுமன்றம் கூடுவதாகத் தெரிவித்தார்.
கொந்தளிப்பான உலகில் நாடு செழித்து வளர அரசாங்கத்தின் முன்னுரிமைகளையும்
புதிய உத்திகளையும் அவர் பட்டியலிட்டார்.
முதலாவது, சிங்கப்பூரின் பாதுகாப்பையும் உலக அரங்கில் சிங்கப்பூரின் இடத்தையும் உறுதிசெய்வது என்றார் அதிபர் தர்மன். இதற்கு தற்காப்பை வலுப்படுத்தி உள்நாட்டில் எழும் அச்சுறுத்தல்களிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மேலும் உலகில் போட்டி அதிகரிக்கும் வேளையில் பொருளாதாரத்தை உருமாற்றவேண்டும் என்றும் அதிபர் தர்மன் வலியுறுத்தினார்.
வேலை தொடங்கி வீடு, பணி ஓய்வுபெறும் காலம் வரை சிங்கப்பூரர்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவு அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
மக்கள் ஒருவொருக்கொருவர் உறுதுணையாக இருக்கும் "நாம் முதலில்" எனும் சமுதாயத்தைச் சிங்கப்பூர் உருவாக்கும் என்றார் அதிபர் தர்மன்.
அவரின் உரைக்கு முன்பாக, நாடாளுமன்ற நாயகரின் தெரிவு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு ஆகிய சடங்குபூர்வ அம்சங்கள் இடம்பெற்றன.