சிங்கப்பூரில் 30,000 மின்னூட்ட முகப்புகள் தயார்!
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் கடந்த மார்ச் நிலவரப்படி 30,500 மின்னூட்ட முகப்புகளைத் தீவு முழுதும் நிறுவியுள்ளது.
2030க்குள் 60,000 முகப்புகளை அமைக்கும் இலக்கில் பாதிக்குமேல் முடிந்துவிட்டது.
அடுத்த ஆண்டிறுதிக்குள் ஒவ்வொரு குடியிருப்புப் பேட்டையிலும் ஓர் அதிவேக மின்னூட்டும் முகப்பு பொருத்தப்பட்டிருக்கும் என்று போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் சுன் சுவே லிங் (Sun Xueling) கூறியுள்ளார்.
பொதுக் கார் நிறுத்துமிடங்களில் 40,000 முகப்புகளையும் தனியார் குடியிருப்புப் பகுதிகளில் 20,000 முகப்புகளையும் 2030க்குள் சிங்கப்பூர் முழுவதும் அமைப்பது இலக்கு.
நிலப்போக்குவரத்து ஆணையம், எரிசக்திச் சந்தை ஆணையம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், JTC நிறுவனம் ஆகியவற்றின் மேற்பார்வையில் தீவு முழுதும் மின்னூட்ட முகப்புகளைப் பொருத்தும் பணி நடைபெறுகிறது.
அதிகத் தேவையிருக்கும் கார் நிறுத்துமிடங்களில் கூடுதல் மின்னூட்ட முகப்புகளைப் பொருத்தவும் ஏற்பாடு செய்யப்படும்.

ஆதாரம் : CNA