Skip to main content
பாவி சூறாவளி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பாவி சூறாவளி - சிங்கப்பூரிலிருந்து கிழக்காசியாவுக்குச் செல்லும் விமானப் பயணங்கள் ரத்து

வாசிப்புநேரம் -
பாவி சூறாவளி - சிங்கப்பூரிலிருந்து கிழக்காசியாவுக்குச் செல்லும் விமானப் பயணங்கள் ரத்து

படம்: AFP/I-Hwa Cheng

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தைவானிலும் சீனாவிலும் பாவி (Bavi) சூறாவளி அதன் சீற்றத்தைக் காட்டத் தொடங்கியிருக்கும் நிலையில் சிங்கப்பூருக்கும் அந்த வட்டாரத்துக்கும் இடையிலான பல விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூருக்கும் ஷங்ஹாய்க்கும் இடையிலான 10 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டன.

பயணம் ரத்தானது குறித்தும் புதிய பயண நேரம் குறித்தும் பயணிகளைத் தொடர்பு கொள்வதாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சொன்னது.

நிச்சயமற்ற நிலை தொடர்வதால் மற்ற விமானப் பயணங்களும் ரத்தாகலாம் என்று அது குறிப்பிட்டது.

சில சீன விமான நிறுவனங்களும் சாங்கி விமான நிலையத்துக்கும் பாதிக்கப்பட்ட வட்டாரங்களுக்கும் இடையிலான பயணங்களை ரத்துச் செய்துள்ளன.

சூறாவளியால் ஏற்கனவே பல பகுதிகளில் பெரும் சேதம்.

பிலிப்பீன்ஸின் மிண்டனாவ் (Mindanao) பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 15 பேர் மாண்டனர்.

தைவானில் சுமார் 9,000 பேர் அவசரமாக வீடுகளிலிருந்து வெளியேற்ப்பட்டனர்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்