Skip to main content
அறிமுகப் பயணமாக வியட்நாம் செல்லும் பிரதமர் வோங்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அறிமுகப் பயணமாக வியட்நாம் செல்லும் பிரதமர் வோங்

வாசிப்புநேரம் -
அறிமுகப் பயணமாக வியட்நாம் செல்லும் பிரதமர் வோங்

(காணொளியிலிருந்து எடுக்கப்பட்டப் படம்: YouTube/Lawrence Wong 黄循财)

பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) வியட்நாம் தலைநகர் ஹனோய்க்கு (Hanoi) இரு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

வியட்நாமியப் பிரதமரின் அழைப்பை ஏற்று அவர் அங்குச் செல்கிறார்.

பிரதமர் வோங்கின் பயணத்தின்போது துணைப்பிரதமர் கான் கிம் யோங் (Gan Kim Yong), தற்காலிகப் பிரதமராய்ப் பொறுப்பு வகிப்பார்.

பிரதமர் வோங் வியட்நாமியத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்புக்கும் பொதுவான நோக்கங்கள் குறித்துக் கலந்துபேசுவார். 

அவற்றில் தொழில்நுட்ப வளர்ச்சி, நிலைத்தன்மை, மின்னிலக்க, பசுமைப் பொருளாதாரம் ஆகியவை அடங்கும்.

திரு வோங் வியட்நாமிய அதிபர் லோங் கோங்கையும் (Luong Cuong) முதன்முறையாகச் சந்திப்பார்.

வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் (Pham Minh Chinh) திரு வோங்கிற்கு அதிகாரத்துவ இரவு விருந்தளித்து உபசரிப்பார்.

திரு வோங் பிரதமர் பொறுப்பை ஏற்றதுமுதல், கம்போடியா, பிலிப்பீன்ஸ் தவிர தென் கிழக்காசியாவின் பெரும்பாலான நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுவிட்டார். 

புதிதாகப் பொறுப்பேற்றுக்கொள்ளும் தலைவர்கள் ஆசியான் நாடுகளுக்கு அறிமுகப் பயணங்களை மேற்கொள்வது வழக்கம்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்