பிரதமர் வோங்கின் இந்தியப் பயணம் - பாடலில் மயங்கிய இணையவாசிகள்
படம்: MDDI
This audio is generated by an AI tool.
பிரதமர் லாரன்ஸ் வோங் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததையொட்டி அண்மையில் சமூக ஊடகத்தில் பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
இருதரப்பு உறவு, அதை முன்னெடுத்துச் செல்லும் அம்சங்கள், இணக்கக் குறிப்புகள், சந்திப்புகள் என்று காணொளியில் இடம்பெறும் பலவற்றைப் பற்றி சிங்கப்பூரர்களும் இந்தியர்களும் கருத்துரைத்தனர்.
ஆனால் இணையவாசிகள் சிலரைக் கவர்ந்தது முற்றிலும் வித்தியாசமான வேறோர் அம்சம்!
"பாடல் அருமை!"
"எப்படி இதைப் போன்ற பாடலைத் தேர்ந்தெடுத்தீர்கள்?"
"ஓர் அதிகாரத்துவ கணக்குக் கூட இந்தப் பாடலைப் பயன்படுத்தியுள்ளதா?"
என்று காணொளியில் பயன்படுத்தப்பட்ட பாடலைக் கேட்டு சிலர் கருத்துப் பதிவிட்டினர்!
126,000க்கும் அதிகமான விருப்பக்குறிகளைப் பெற்ற திரு வோங்கின் காணொளியில் பிரபல ஆங்கிலப் பாடகர் எட் ஷீரனின் (Ed Sheeran) பாடல் Sapphire இடம்பெறுகிறது.
இந்தியப் பாடகர் அர்ஜித் சிங்குடன் சேர்ந்து தயாரிக்கப்பட்ட அந்தப் பாடலில் மேற்கத்திய பாணி இசையும் பஞ்சாப் பாடல் பாணியும் இணைந்து ஒலிக்கிறது.