Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"சிங்கப்பூரும் போலந்தும் ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட நட்பு நாடுகள்"

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

போலந்து நிறுவனங்கள் சிங்கப்பூரில் வாய்ப்புகளை ஆராயலாம் என்று வர்த்தக விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார்.

நிச்சயமற்ற உலகச் சூழல் இப்போது நிலவுகிறது.

இந்நிலையில் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் நிறுவனங்களுக்குச் சிங்கப்பூர் தொடர்ந்து நம்பகமான பங்காளியாக விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

இருதரப்பு வர்த்தகக் கலந்துரையாடலில் திருவாட்டி ஃபூ பேசினார்.

சிங்கப்பூருக்கு வருகையளித்துள்ள போலந்து அதிபர் ஆண்ட்ரே டூடா கலந்துரையாடலில் பங்கெடுத்தார்.

சிங்கப்பூரில் சுமார் 170 போலந்து நிறுவனங்கள் செயல்படுகின்றன.

உள்ளூர் நிறுவனங்கள் போலந்தில் காட்டும் ஆர்வமும் அதிகரித்துள்ளதைத் திருவாட்டி ஃபூ சுட்டினார்.

சிங்கப்பூரும் போலந்தும் ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட நட்பு நாடுகள் என்றார் அவர்.

அவை வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குவது முக்கியம் என்று அமைச்சர் ஃபூ வலியுறுத்தினார்.

பொருளாதார உடன்பாடுகளின்வழி விதிமுறைகள் அடிப்படையிலான வர்த்தகச் செயல்முறையை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் தளவாட, துறைமுக நிறுவனங்கள் உலகில் முன்னணி வகிப்பதாகப் பாராட்டினார் போலந்து அதிபர் டூடா.

ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் இருதரப்பு வாய்ப்புகள் நிச்சயம் இருப்பதாக அவர் சொன்னார்.

3 நாள் பயணத்தில் PSA International நிறுவனத்தைத் திரு டூடா பார்வையிட்டார்.

போலந்தின் போக்குவரத்து, தளவாடத் துறைகளில் சிங்கப்பூர் நிறுவனமான PSA International குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்