Skip to main content
குண்டர் கும்பலை வழிநடத்திய சந்தேகத்தில் 66 வயது ஆடவர் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குண்டர் கும்பலை வழிநடத்திய சந்தேகத்தில் 66 வயது ஆடவர் கைது

வாசிப்புநேரம் -
குண்டர் கும்பலை வழிநடத்திய சந்தேகத்தில் 66 வயது ஆடவர் கைது

(படம்: Envato Elements)

சிங்கப்பூரில் குண்டர் கும்பல் ஒன்றினை வழிநடத்திய சந்தேகத்தில் 66 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி கேலாங், செங்காங், பிடோக், அங் மோ கியோ ஆகிய பகுதிகள் உட்பட தீவு முழுதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதில் கைதான மொத்தம் 19 பேரில் அந்த ஆடவரும் ஒருவர்.

கேலாங் லோரோங் 14, 16 பகுதிகளில் அவர்கள் கும்பலாகச் சூதாட்டக்கூடங்களை நடத்தியதாக நம்பப்படுகிறது.

அவர்கள் மீது 2021ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி
நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால் அந்த ஆடவர் நீதிமன்றத்திற்கு வராமல் தலைமறைவானதாகக் காவல்துறை தெரிவித்தது.

அதனால் அரசு நீதிமன்றம் அவருக்குக் கைதாணை பிறப்பித்தது.

சென்ற மாதம் (பிப்ரவரி) 13ஆம் தேதி மலேசியக் காவல்துறை குடிநுழைவுக் குற்றங்களுக்காக அவரைக் கைதுசெய்து 3,000 ரிங்கிட் (சுமார் 900 வெள்ளி) அபராதம் விதித்ததாகத் தெரிவித்தது.

பின்னர் பிப்ரவரி 28ஆம் தேதி அவரைச் சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைத்தது.

இம்மாதம் 1ஆம் தேதி ஆடவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 19 ஆண்டுச் சிறைத்தண்டனை, 160,000 வெள்ளி அபராதம், 6 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்