பாவனை இணையத் தாக்குதல் நடத்தி, இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டம்
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர்ப் பலதுறை தொழிற்கல்லூரியின் திட்டம், சிறிய, நடுத்தர நிறுவனங்களின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த உதவவிருக்கிறது.
அடுத்த ஆண்டின் நடுப்பகுதிக்குள் 50 நிறுவனங்களுக்கு உதவுவது எண்ணம்.
அந்த முயற்சியின் மூலம் சுமார் 180 மாணவர்களுக்குத் தொழில்துறை சார்ந்த அனுபவமும் கிடைக்கும்.
சிங்கப்பூரில் பாதுகாப்பான, அனுமதி பெற்ற பாவனை இணையத் தாக்குதல்களை நடத்த சிங்கப்பூர்ப் பலதுறை தொழிற்கல்லூரி உரிமம் பெற்றுள்ளது.
அதுவே, அத்தகைய உரிமம் பெற்ற முதல் உயர்க்கல்வி நிலையமும் கூட.
திட்டத்திற்காகத் தொழிற்கல்லூரியில் வளாகம் அமைக்கப்படும்.
CASTLE என்று திட்டம் அழைக்கப்படும். கட்டமைப்புகள் எவ்வளவு எளிதில் பாதிக்கப்படக்கூடியவை என்பதைக் கண்டுபிடிப்பது, அவை எந்த அளவுக்கு உறுதியாக இருக்கின்றன என்பதைச் சோதிப்பது, ஆலோசனைச் சேவைகள் வழங்குவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவை திட்டத்தில் அடங்கும்.
அங்கு மாணவர்களும் ஊழியர்களும் இணையப் பாதுகாப்பு நிபுணர்களுடன் சேர்ந்து உண்மையான மிரட்டல்களை ஆராய்வர்.