Skip to main content
சிங்கப்பூரில் நிலத்தடியில் வீடுகள் வருமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நிலத்தடியில் வீடுகள் வருமா?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் நிலத்தடியில் வீடுகள் வருமா?

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: Youtube/CNA

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் நிலத்தடியில் ரயில் சேவை, பாதாளச் சாக்கடை, மின்சார விநியோகம் ஆகியவற்றுக்கான கட்டமைப்புப் பெருமளவு வளர்ந்து வருகிறது.

தற்போது சுமார் 300 கிலோமீட்டர் நீளமிக்கச் சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்த 10 ஆண்டில் மேலும் 60 கிலோமீட்டர் நீளத்துக்குச் சுரங்கங்கள் கட்டத் திட்டமுள்ளதாக நகரச் சீரமைப்பு ஆணையம் கூறியுள்ளது.

எதிர்காலத்தில் நிலத்தடிக் குடியிருப்புகள் கட்டடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று ஆணையத்திடம் கேட்டது CNA.

தற்போது அதுபோன்ற திட்டங்கள் ஏதுமில்லை என்றது ஆணையம்.

மாறாக ரயில் பாதைகள், நீர்த்தேக்கங்கள், கிடங்குகள் போன்றவற்றுக்கே நிலத்தடியில் கட்டமைப்புகள் உருவாக்க முன்னுரிமை தருவதாய் அது சொன்னது.

2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் முதல் நிலத்தடி நீர்த்தேக்கம் பிடாடாரியில் (Bidadari) செயல்படத் தொடங்கியது.

பூங்கா ஒன்றின் அடியில் 9 மீட்டர் ஆழத்தில் அது அமைந்துள்ளது. சுமார் 8,800 வீடுகளுக்கான நீர் விநியோகத்துக்கு அது பயன்படுகிறது.

2032-இல் கிரோஸ் ஐலண்ட் (Cross Island) MRT பாதையில் இரண்டாவது கிங் ஆல்பர்ட் பார்க் (King Albert Park) நிலையம் கட்டி முடிக்கப்படும்.

சிங்கப்பூரில் ஆக ஆழத்தில் அமைந்துள்ள MRT நிலையமாக அது திகழும். அது நிலத்துக்கு அடியில் 50 மீட்டர் ஆழத்தில் இருக்கும்.

தற்போது அந்தப் பெருமையைப் பெற்றிருப்பது பென்கூலன் (Bencoolen) நிலையம். அது 43 மீட்டர் ஆழத்தில் உள்ளது.

எதிர்காலத்தில் சிங்கப்பூரில் மழைப்பொழிவும் வெப்பமும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் பாதசாரிகளுக்குக் கூடுதல் நிலத்தடிப் பாதைகள் உருவாக்குவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்துகிறார் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் யோங் கிவெட்-யூ (Yong Kwet-Yew).

அவ்வாறு செய்வதால் சாலைப் போக்குவரத்து மேலும் சுமூகமாக அமையும் என அவர் கூறுகிறார்.

மற்ற நாடுகளில் நிலத்தடியைப் பயன்படுத்தும் திட்டங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து சிங்கப்பூரின் தேவைகளுக்கு ஏற்பத் திட்டங்கள் வகுப்பதாக நகரச் சீரமைப்பு ஆணையம் CNAஇடம் சொன்னது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்