"அரசியல் பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையில் துடிப்பான அரசதந்திரம் முக்கியம்" - அதிபர் ஹலிமா யாக்கோப்
வாசிப்புநேரம் -

(படம்: Facebook/Halimah Yacob)
அதிபர் ஹலிமா யாக்கோப் உலக அரசியல் பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையில் துடிப்பான அரசதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
மத்திய ஆசியாவுக்கான தமது பயணத்தை நிறைவுசெய்து அவர் பேசினர்.
கஸக்ஸ்தானுக்கும் உஸ்பெக்கிஸ்தானுக்கும் மேற்கொண்ட 5 நாள் பயணத்தில் அதிபர் ஹலிமா அரசியல், சமய, வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினர்.
மத்திய ஆசியச் சந்தையில் சிங்கப்பூர் நிறுவனங்கள் தடம்பதிக்க உதவும் சில வர்த்தக உடன்படிக்கைகள் அதிபர் ஹலிமா முன்னிலையில் கையெழுத்தாகின.
பெண்களின் மேம்பாட்டிலும் அதிபரின் பயணம் கவனம் செலுத்தியது.
உஸ்பெக்கிஸ்தானில் அவர் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார்.
இந்நிலையில், மேலும் ஒரு தவணைக் காலத்துக்கு அதிபர் பொறுப்பை ஏற்கத் தேர்தலில் களமிறங்கத் திட்டமுள்ளதா என அதிபரிடம் கேட்கப்பட்டது.
சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் இவ்வாண்டு நடைபெற்றாகவேண்டும்.
அதில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவெடுக்கவிருப்பதாக அதிபர் ஹலிமா சொன்னார்.