Skip to main content
பாரீஸில் அதிபர் தர்மன்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பாரீஸில் அதிபர் தர்மன்

வாசிப்புநேரம் -
அதிபர் தர்மன் சண்முகரத்னம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் Elysee அரண்மனையில் அதிபர் இம்மானுவெல் மக்ரோன் (Emmanuel Macron) வழங்கிய இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

அதிபர் தர்மன் இத்தாலியின் ரோம் நகருக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்;
அதற்கு இடையே பிரஞ்சுத் தலைநகருக்குச் சென்றார்.

சிங்கப்பூருக்கும் பிரான்ஸுக்கும் இடையே நிலவும் வலுவான ஒத்துழைப்பை இரு நாட்டுத் தலைவர்களும் மறுஉறுதிப்படுத்தினர்.

வட்டார, உலகளாவிய மேம்பாடுகள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறினர்.

ரோமில் திரு தர்மன் இத்தாலி அதிபர் செர்கியோ மட்டாரெல்லாவைச் (Sergio Mattarella) சந்திக்கவிருக்கிறார்.

உலக வங்கிக் குழுமத்தின் உயர்நிலை ஆலோசனை மன்றத்தில் அவர் வேலைகள், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றின் தொடர்பில் முக்கிய உரையாற்றுவார்.

கத்தோலிக்கத் தலைவர் போப் லியோவையும் (Pope Leo XIV) அவர் சந்திப்பார்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்