Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆசியானுக்குள் துணிச்சலான சீர்திருத்தங்கள் அவசியம்: பிரதமர் வோங்

வாசிப்புநேரம் -
ஆசியானுக்குள் துணிச்சலான சீர்திருத்தங்கள் அவசியம்: பிரதமர் வோங்

படம்: CNA/Jeremy Long

ஆசியானுக்குள் துணிச்சலான சீர்திருத்தங்கள் தேவை என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

வர்த்தகம், முதலீடு ஆகியவற்றுக்கான தடைகளைக் குறைக்கவும், உள்கட்டமைப்புகளை இணைக்கவும் அது மிகவும் முக்கியம் என்றார் அவர்.

காலத்துக்கேற்ப வலுவாகவும், துடிப்புமிக்கதாவும் ஆசியான் திகழ வட்டார, உலக நட்பு நாடுகளுடன் சிங்கப்பூர் அணுக்கமாய்ப் பணியாற்றும் என்று திரு வோங் கூறினார்.

ஆசியான் நாடுகளுக்கான அதிகாரத்துவப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் சமூக ஊடகத்தில் அந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆசியான் நாடுகளே சிங்கப்பூரின் நெருக்கமான அண்டை நாடுகள் என்பதைப் பிரதமர் சுட்டினார். அனைத்து ஆசியான் நாடுகளுடனும் சிங்கப்பூருக்கு இருதரப்பு உறவு உள்ளது என்றார் அவர். ஒற்றுமையான வலுவான ஆசியான் அனைவருக்கும் நன்மையளிக்கும் என்றார் அவர்.

மியன்மார் தவிர ஆசியானின் ஏனைய நாடுகளுக்குத் திரு வோங் சென்றிருந்தார். பொருத்தமான சூழல் வாய்த்தால் மியன்மாருக்குச் செல்ல முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்