சிங்கப்பூர்ச் சிறைச் சேவை வாகனமும் 2 கார்களும் மோதல்
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்ச் சிறைச் சேவையின் வாகனமும் 2 கார்களும் மத்திய விரைவுச்சாலையில் (CTE) விபத்தில் சிக்கின.
கைதி ஒருவருக்கும் 2 அதிகாரிகளுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.
சிங்கப்பூர்ச் சிறைச் சேவை விபத்து குறித்துத் தன்னுடைய Facebook பக்கத்தில் தெரிவித்திருந்தது.
விபத்து நேற்று நடந்தது.
மத்திய விரைவுச்சாலையில், சிலேத்தார் விரைவுச்சாலையை (Seletar Expressway) நோக்கிச் செல்லும் வழியில் ஜாலான் பஹாகியா (Jalan Bahagia) வெளிவாயிலுக்குப் பிறகு விபத்து நேர்ந்தது.
டான் டொக் செங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி ஒருவரும் அவருடன் இருந்த 2 அதிகாரிகளும் செலாராங் பார்க் (Selarang Park) வளாகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது கார் ஒன்று சிறைச் சேவை வாகனத்தின் பின்னால் இடித்தது.
அதன் காரணமாகச் சிறைச் சேவை வாகனம் முன்னால் இருந்த காரை இடித்தது.
சம்பவம் நடந்தவுடன் சிறைச் சேவை, குடிமைத் தற்காப்புப் படையிடமும் காவல்துறையிடமும் அது குறித்துத் தெரிவித்தது.
கைதிக்குச் சாங்கி பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதிகாரிகளும் சிகிச்சை பெற்றனர்.
சிறை அதிகாரிகள் காவல்துறை விசாரணையில் உதவி வருகின்றனர்.

ஆதாரம் : Others/8 World