Skip to main content
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்குக் கடுமையான தண்டனை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்குக் கடுமையான தண்டனை - பரிசீலனை

வாசிப்புநேரம் -
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்குக் கடுமையான தண்டனை - பரிசீலனை

படம்: CNA/Tan Wen Lin

வெளியீடு : 07 Jul 2026 12:37PM புதுப்பிப்பு : 07 Jul 2026 03:04PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் ஆபத்தான முறையில் வாகனமோட்டி மோசமான காயம் ஏற்படுத்துவோருக்குத் தண்டனைகளைக் கடுமையாக்குவது குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது.

போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் அத்தகைய குற்றம் புரிவோருக்கு அதிகபட்ச சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

நாடாளுமன்றத்தில் உள்துறை மூத்த துணையமைச்சர் சிம் ஆன் (Sim Ann) சாலைப் போக்குவரத்துச் சட்ட திருத்த மசோதாவை முன்வைத்தார்.

ஓட்டுநர்களுக்கு அனுமதிக்கப்பட்ட மதுபான அளவைக் குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

2021ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டுவரை வாகன விபத்துகளில் மாண்டோர் விகிதம் 24 விழுக்காடு அதிகரித்துள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறியோரின் விகிதம் 38 விழுக்காடு அதிகரித்தது.

சாலைகளைப் பாதுகாப்பாக்க சட்டத்தைக் கடுமையாக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சு சொன்னது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்