Skip to main content
சிங்கப்பூரில் அதிகாரபூர்வ விளையாட்டுப் பட்டியலில் இனி e
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் அதிகாரபூர்வ விளையாட்டுப் பட்டியலில் இனி e-sports, bridge, சதுரங்கம்

வாசிப்புநேரம் -
 சிங்கப்பூரில் அதிகாரபூர்வ விளையாட்டுப் பட்டியலில் இனி e-sports, bridge, சதுரங்கம்
படம்: Envato
E-sports, bridge, சதுரங்கம் ஆகியவை இனி சிங்கப்பூரில் அதிகாரபூர்வ விளையாட்டுகளாக அங்கீகரிக்கப்படலாம்.

அதற்கான சட்டமசோதா இன்று நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்கு வந்தது.

கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ (David Neo) அதனை தாக்கல் செய்தார்.

அண்மைக் காலமாக e-sports, bridge, சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் மீது சிங்கப்பூரில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

அதனைக் கருத்தில்கொண்டு புதிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் முக்கிய அனைத்துலக e-sports விளையாட்டு நிகழ்வுகளை நடத்தியுள்ளது.
The International 2022 விளையாட்டுப் போட்டி அதில் ஒன்று. தென்கிழக்காசியாவில் அந்த மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வை நடத்திய முதல் நாடாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது.

2023ஆம் ஆண்டு சிங்கப்பூர் முதல் Olympic Esports வாரத்தை நடத்தியது.

சதுரங்கம் போன்ற விளையாட்டுகளும் சிங்கப்பூரில் மிகவும் பிரபலமாகி வருகின்றன.

2024ஆம் ஆண்டு இடம்பெற்ற 75ஆவது தேசிய பள்ளிகளுக்கு இடையிலான தனிநபர் சதுரங்கப் போட்டியில் 1,606 இளையர்கள் பங்கேற்றனர்.

2022ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அது சுமார் 20 விழுக்காடு அதிகம்.

கடந்த ஆண்டு, சிங்கப்பூர் முதன்முறையாக உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியை நடத்தியது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்