Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத்தில் திருத்தம் : விரைவில் கூடுதல் தண்டனை

வாசிப்புநேரம் -
எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத்தில் திருத்தம் : விரைவில் கூடுதல் தண்டனை

CNA/Wallace Woon

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 04 Nov 2026 06:10PM புதுப்பிப்பு : 04 Nov 2026 06:12PM

எல்லை தாண்டிய புகைமூட்டத்துக்குக் காரணமான நிறுவனங்களுக்கு 20 மில்லியன் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அவற்றின் வர்த்தக நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்படலாம்.

அதற்கான சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்குத் தண்டனை கடுமையாக்கப்படலாம்.

மொத்த அபராதம் 2 மில்லியன் வெள்ளியிலிருந்து அதிகபட்சம் 20 மில்லியன் வெள்ளியாக உயர்த்தப்படலாம்.

வர்த்தக, நிதி கட்டுப்பாடுகள்

சம்பந்தப்பட்ட தரப்புகள் மீது வர்த்தக, நிதிக் கட்டுப்பாடுகள் விதிக்கச் சட்டத் திருத்தம் வழியமைக்கும்.

அத்தகைய தரப்புகளை அடையாளம் காண நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்படும்.

அடையாளம் காணப்பட்ட தரப்புகளுடன் வர்த்தகம் நடத்தவும் நிதியுதவி வழங்கவும் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சம் ஒரு மில்லியன் வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.

கட்டுப்பாடு மீறப்படும் ஒவ்வொரு நாளுக்கும் 100,000 வெள்ளி அபராதம் வரை விதிக்கப்படலாம்.

கட்டுப்பாடுகளுக்கு இணங்க மறுக்கும் நிறுவனங்களின் பெயரை வெளியிடவும் தேசியச் சுற்றுப்புற அமைப்புக்கு  அதிகாரம் கிடைக்கலாம்.

புகைமூட்டத்துக்குக் காரணமான நிறுவனங்களைக் கண்டறியவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவும் புதிய சட்டம் உதவும் என்று நம்பப்படுகிறது.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்