"புகைமூட்டத்தைக் கையாள சிங்கப்பூர் தயார்"
வாசிப்புநேரம் -
படம்: AFP/Bay Ismoyo
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
புகைமூட்டம் ஏற்பட்டால் அதைச் சமாளிக்க சிங்கப்பூர் தயாராய் இருப்பதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) கூறியிருக்கிறார்.
புகைமூட்ட நிலவரம் பற்றி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் சொன்னார்.
ஆசியான் கண்காணிப்பு நிலையம் இந்த வட்டாரத்தில் எல்லைகடந்து புகைமூட்ட அபாயம் குறித்த எச்சரிக்கையை இரண்டாம் நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.
எல் நினோ நிகழ்வால் வட்டாரம் வறண்டு காணப்படுகிறது.
இந்தோனேசியாவின் சுமத்ரா (Sumatra), கலிமந்தான் (Kalimantan) தீவுகளில் காட்டுத்தீ மூண்டுள்ளதைத் துணைக்கோளப் படங்கள் காட்டுகின்றன.
நிலைமையை அமைச்சு கண்காணிப்பதாகத் திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.
மே மாதம் முதல் அரசாங்க அமைப்புகள் புகைமூட்ட அபாயம் குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை வழங்கிவருவதாக அவர் குறிப்பிட்டார்.
காற்றின் தரம், சுகாதார ஆலோசனைகள் குறித்த செய்திகளைச் சரியான நேரத்தில் வெளியிடுவதற்கு ஊடகங்களுடன் தேசியச் சுற்றுப்புற அமைப்பு இணைந்து செயல்படும் என்றும் அவர் சொன்னார்.
பொதுமக்கள், பள்ளிகள் ஆகியவை அதற்கேற்ப நடவடிக்கையை எடுக்க அது உதவும் என்றும் அவர் விளக்கினார்.

ஆதாரம் : CNA