எல்லைதாண்டிய புகைமூட்டச் சட்டத்தில் திருத்தம் - அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல்
This audio is generated by an AI tool.
எல்லைதாண்டிய புகைமூட்டச் சட்டத்தில் திருத்தம் முன்வைக்கப்படவிருக்கிறது.
அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் அது தாக்கல் செய்யப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) தெரிவித்தார்.
எல்லைதாண்டிய புகைமூட்டத்துக்குக் காரணமாக இருக்கக்கூடிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை இன்று சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
சந்திப்பில் துணைப்பிரதமர் கான் கிம் யொங்கும் மூத்த அமைச்சர் கா சண்முகமும் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நிறுவன அதிகாரிகளிடம் தெளிவுபடுத்தியதாக அமைச்சர் ஃபூ சொன்னார்.
"புகைமூட்ட நிலவரம் மேம்பட்டாலும் நாங்கள் விவகாரத்தை இத்துடன் விட்டுவிடப்போவதில்லை," என்றார் அவர்.
முன்மொழியப்பட்ட மாற்றங்களின் கீழ் நிறுவனங்கள் சுயேச்சையான மதிப்பீட்டாளர்களை நியமிப்பதற்கு தேசியச் சுற்றுப்புற அமைப்பு வலியுறுத்த முடியும்.
ஒத்துழைக்கத் தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் உள்ள மதிப்பீட்டாளர்களை நியமிப்பதற்கான செலவை நிறுவனங்கள் ஏற்க வேண்டும்.
மதிப்பீட்டாளர்கள், நிறுவனங்களின் செயல்பாடுகள், விநியோகத் தொடர்கள், மற்ற நிறுவனங்களுடன் அவை கொண்டுள்ள உறவுகள் ஆகியவற்றைப் பரிசீலிப்பர்.
முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.
மதிப்பீட்டாளர்கள் அடங்கிய பட்டியல் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.
நிறுவனங்கள் வெள்ளிக்கிழமைக்குள் மதிப்பீட்டுக் குழுக்களை நியமிக்க வேண்டும்.