பிலிப்பீன்ஸ் நிலநடுக்கம் - சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $50,000 உதவி
வாசிப்புநேரம் -
படம்: Reuters/Adrian Portugal
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிலிப்பீன்ஸில் நிவாரணப் பணிக்கு உதவ 50,000 வெள்ளி வழங்கவிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்க உரிய அமைப்புகளுடன் சங்கம் பேசி வருகிறது.
பிலிப்பீன்ஸ் செஞ்சிலுவைச் சங்கம் துரிதமாகச் செயல்பட்டுச் சேத மதிப்பு ஆய்வு, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் கூறியது.
நிலநடுக்கத்தில் 72 பேர் மாண்டனர். 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் பிலிப்பீன்ஸை அச்சுறுத்தும் மாட்மோ (Matmo) வெப்பமண்டலப் புயலைக் கூர்ந்து கவனித்து வருவதாகவும் சங்கம் சொன்னது.
அண்மையில் இரண்டு சூறாவளிகள் பிலிப்பீன்ஸைப் புரட்டிப் போட்டன.
புவலொய் (Bualoi) சூறாவளியில் 37 பேர் மாண்டனர். ரகாசா (Ragasa) சூறாவளியில் 14 பேர் மாண்டனர்.

ஆதாரம் : Others