நேப்பாளத்துக்கு மேலும் $170,000 மனிதாபிமான உதவி: சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம்
வாசிப்புநேரம் -
படம்: AP/Rajesh Kumar Singh
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நேப்பாளத்துக்கு மேலும் 170,000 வெள்ளி மதிப்பிலான மனிதாபிமான உதவியை வழங்குவதாக சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
நேப்பாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் திரட்டப்பட்டுள்ள நன்கொடைகள் 3 மில்லியன் வெள்ளியைத் தாண்டியுள்ளதாகவும் அது சொன்னது.
நீர் சுத்திகரிப்புப் பொடி, நீர் வடிகட்டிகள், அவசரகால உணவுப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கக் கூடுதல் தொகை உதவும் என்று சங்கம் தெரிவித்தது.
இதற்குமுன் நேப்பாளத்துக்கு 50,000 வெள்ளி மதிப்பிலான மனிதாபிமான உதவியைச் சங்கம் வழங்கியது.
170,000 வெள்ளி தொகையில், 80,000 வெள்ளி அவசரகால உணவுப் பொருள்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்கள் 2,500 குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
அவை, நேப்பாளத்தில் இருக்கும் தனது பங்காளி அமைப்புகள் மூலம் கொடுக்கப்படும் என்று சங்கம் தெரிவித்தது.
எஞ்சிய 90,000 வெள்ளி தொகை, நேப்பாளத்தில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்யப் பயன்படுத்தப்படும் என்றும் சங்கம் குறிப்பிட்டது.

ஆதாரம் : CNA