Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கண்ணாடிச் சுவர் எனத் தெரியாமல் மோதினார் பெண் - உதட்டில் காயம்

வாசிப்புநேரம் -

ராஃபிள்ஸ் சிட்டியில் உள்ள (Raffles City) Putien உணவகத்தில் இருந்த பெண் ஒருவர் கழிவறைக்குச் செல்ல எழுந்தார்.

ஆனால் அங்கிருந்த கண்ணாடிச் சுவரைக் கவனிக்காமல் அதன் மீது அவர் மோதினார்.

அதன் விளைவாக அவரின் உதட்டில் காயம் ஏற்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (1 மே) பிற்பகல் 3.45 மணிவாக்கில் அச்சம்பவம் நேர்ந்தது.

கழிவறைக்குச் செல்லும் வழியைப் பணியாளர் ஒருவரிடம் அவர் கேட்டதாக உணவகத்தின் மேலாளர் கூறினார்.

முன்கதவுக்கு வெளியே சென்று வலப்பக்கம் திரும்பச் சொன்னார் பணியாளர்.

ஆனால் கதவை அடைவதற்கு முன்பே வலப்பக்கம் திரும்பினார் மாது.

கண்ணாடிச் சுவர் மீது அவர் மோதினார்.

கடந்த மாதம் 22ஆம் தேதி அந்த உணவகம் திறக்கப்பட்டதால், அலங்காரப் பணிகள் சில இன்னும் முடிக்கப்படவில்லை.

அவற்றில் ஒன்று, கடையின் பெயரைக் கண்ணாடிச் சுவரில் ஒட்டுவது.

சீரமைப்புப் பணிகள் இன்னும் முடிவடையாததால், விபத்துகளைத் தவிர்க்க கண்ணாடிச் சுவர் முன்புறம் கூடுதல் நாற்காலிகள் வைக்கப்பட்டன.

ஆனால் சம்பவம் நிகழ்ந்த தினம், வார இறுதி நாள் என்பதால் உணவகத்தில் கூட்டம் அதிகமிருந்தது.

அதனால் கண்ணாடிச் சுவர் முன் வைப்பதற்குக் போதிய நாற்காலிகள் இல்லை.

உதட்டில் காயமடைந்த அப்பெண் மருந்தகத்திற்குச் செல்ல மறுத்துவிட்டார்.

அவரிடம் மன்னிப்புக் கேட்டு இலவச உணவுடன் கட்டணத்தில் தள்ளுபடியும் வழங்கியது உணவகம்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதைத் தவிர்க்க, கண்ணாடிச் சுவருக்கு முன் ஒரு வேலியையும் பிள்ளைகளுக்கான நாற்காலிகளையும் வைத்துள்ளது உணவகம்.

ஆதாரம் : Others/8world

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்