செப்டம்பரில் சில்லறை விற்பனை 1.7% அதிகரிப்பு
படம்: AFP/Roslan Rahman
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் செப்டம்பர் மாதச் சில்லறை விற்பனை கடந்த ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் திருத்தப்பட்ட வளர்ச்சி விகிதம் 0.8 விழுக்காடாக இருந்தது.
அதனுடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாத வளர்ச்சி கிட்டத்தட்ட இரு மடங்கு.
மொத்தச் சில்லறை விற்பனை 4.3 பில்லியன் வெள்ளியை எட்டியது.
கணினி, தொலைத்தொடர்புச் சாதனங்களின் விற்பனை ஆக அதிகமாக 16.5 விழுக்காடு உயர்ந்தது.
அதைத் தொடர்ந்து பெட்ரோல் நிலையங்களின் விற்பனை 6.5 விழுக்காடும் அழகுசாதனப் பொருள்கள், சுகாதாரப் பொருள்கள், மருத்துவப் பொருள்களின் விற்பனை 6 விழுக்காடும் அதிகரித்தன.
இருப்பினும் பெரும்பாலான சில்லறை விற்பனைப் பிரிவுகளில் சரிவு பதிவானது.
சிறிய கடைகள், அக்கம்பக்கக் கடைகளின் விற்பனை ஆக அதிகமாக 5.6 விழுக்காடு சரிந்தது.
ஆடைகள், பொழுதுபோக்குப் பொருள்கள்,
கைக்கடிகாரங்கள், நகைகள் ஆகியவற்றின் விற்பனையும் குறைந்தது.
உணவு, பானச் சேவைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு விழுக்காடு உயர்வைக் கண்டன.