சிங்கப்பூரில் சில்லறை விற்பனை 5.2% அதிகரித்துள்ளது
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் சில்லறை விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டு அடிப்படையில் 5.2 விழுக்காடு ஏற்றங்கண்டது.
ஜூலையில் அது 4.8 விழுக்காடு கூடியது.
இவ்வாண்டில் இதுவே ஆக வலுவான மாதாந்திர விற்பனை.
பெரும்பாலான தொழில்துறைகளில் விற்பனை அதிகரித்தது.
கடிகாரம், நகை ஆகியவற்றின் விற்பனை 11 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்தது.
பொழுதுபோக்குப் பொருள்களின் விற்பனை சுமார் 10 விழுக்காடு கூடியது.
இருப்பினும் உணவு, பானத்துறை ஜூலை மாதத்தைக் காட்டிலும் ஆகஸ்ட்டில் 0.4 விழுக்காடு குறைந்தது.
அதற்குப் பெரும்பாலும் உணவகங்கள் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால் விரைவு உணவு நிறுவனங்கள், உணவு விநியோக நிறுவனங்கள் ஆகியவற்றில் விற்பனை கூடியது.

ஆதாரம் : Others